சேப்பாக்கம் மைதானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் : ஐ.பி.எல். தொடர் ஒரு வாரத்திற்கு நிறுத்தம்

சேப்பாக்கம் மைதானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் ஐ.பி.எல். தொடர் ஒரு வாரத்திற்கு நிறுத்தம்

18-வது ஐ.பி.எல்  கிரிக்கெட் தொடர்,  இந்தியாவின் பல்வேறு நகரங்களில் கடந்த மார்ச் 22-ம் தேதி தொடங்கி, சிறப்பாக நடைபெற்று வந்தது. இதுவரை 58 லீக் ஆட்டங்கள் முடிந்துள்ள நிலையில், மீதி 12 போட்டிகள் மட்டுமே எஞ்சியுள்ளன.


இந்நிலையில், இந்தியா – பாகிஸ்தான் இடையே ஏற்பட்டுள்ள போர் பதற்றம் காரணமாக, ஐ.பி.எல். தொடரை ஒரு வாரத்திற்கு தற்காலிகமாக நிறுத்துவதற்கு BCCI முடிவு எடுத்துள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இந்த தகவலால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ள நிலையில், தற்போது சென்னை சேப்பாக்கம் மைதானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.

டெல்லி கிரிக்கெட் வாரியத்திற்கு அனுப்பப்பட்ட மின்னஞ்சல் மூலம் இந்த மிரட்டல் விடுக்கப்பட்டுள்தாகவும், அந்த மின்னஞ்சல் பாகிஸ்தானை சேர்ந்ததாக போலியான வடிவத்தில் உருவாக்கப்பட்டிருப்பதாக அதிகாரிகள் சந்தேகம் தெரிவிக்கின்றனர்.

மேலும் அந்த மின்னஞ்சலில், “ஐ.பி.எல். போட்டி நடத்தினால் சேப்பாக்கத்தில் குண்டு வெடிக்கும்” எனக் கூறி மிரட்டல் விடுக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன

இதையடுத்து பாதுகாப்பு படைகள், காவல்துறை மற்றும்  சேப்பாக்கம் மைதானத்தில் தீவிர சோதனைகள் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த மிரட்டல் சம்பவம், ஏற்கனவே நிலவிய பதற்ற சூழ்நிலையில் மேலும் பதற்றத்தை அதிகரித்துள்ளது. ஐ.பி.எல். மீதமுள்ள போட்டிகள் ஏற்கெனவே ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில், இதுபோன்ற மிரட்டல்களால் நடப்பு சீசன் மீணடும் நடத்தபடுமா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது