சண்டிகரில் வான்வழி தாக்குதல் அச்சுறுத்தல்: மக்கள் வீட்டில் இருக்குமாறு அறிவுறுத்தல்

சண்டிகரில் வான்வழி தாக்குதல் அச்சுறுத்தல் மக்கள் வீட்டில் இருக்குமாறு அறிவுறுத்தல்

பஞ்சாப் மாநிலம் சண்டிகரில் சைரன் ஒலிக்கப்பட்டு மக்கள் வெளியே வர வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் வான்வழியாக தாக்குதல் நடத்தக்கூடும் என்பதால் சண்டிகரில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

சண்டிகர் நிர்வாகம் வெளியிட்ட அறிவிப்பில், அனைவரும் வீட்டிற்குள்ளேயே இருக்க வேண்டும். வெளியே வரவேண்டாம், பால்கனிகளில் நிற்க வேண்டாம்” என்று பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பஹல்காம் பள்ளத்தாக்கில் ஏற்பட்ட பயங்கரவாத தாக்குதலுக்கும் அதனைத் தொடர்ந்து இந்தியா மேற்கொண்ட ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கும்  பிறகு இந்தியா பாகிஸ்தான்இடையே போர் பதற்றம் அதிகரித்துள்ளதால் இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன

பாகிஸ்தானிலிருந்து வந்த மூன்று போர் விமானங்களை இந்தியா சுட்டு வீழ்த்தியது என்றும், ட்ரோன் முயற்சிகளும் முறியடிக்கப்பட்டதாகவும் ராணுவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஜம்மு, பதான்கோட், உதம்பூர் உள்ளிட்ட இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இந்திய எல்லை மாநிலங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், சண்டிகரில் எச்சரிக்கைகள் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரமாக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன.