
தவெகவில் இருந்து விலகிய இன்ஸ்டா பிரபலம் வைஷ்ணவி,பாஜகவில் இணைய வானதி சீனிவாசன் அழைப்பு விடுத்துள்ளார்.
தமிழக வெற்றிக் கழகம் எனும் புதிய கட்சியை தொடங்கியுள்ள நடிகர் விஜய் 2026 சட்டமன்றத் தேர்தலை நோக்கி மாநாடு,மாவட்ட செயலாளர் நியமனம், பூத் கமிட்டி ஆலோசணை கூட்டம் என அடுத்தடுத்து நகர்வுகளை தீவிரமாக நகர்த்தி வருகிறார்.
இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தவெக பூத் கமிட்டி மாநாடு கோவையில் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் உறுப்பினரும் இன்ஸ்டா பிரபலருமான வைஷ்ணவிக்கு ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க அனுமதி மறுக்கப்பட்டதாக செய்தியாளர்கள் பேட்டி ஒன்றில் அவர் பேசியது , தவெகவில் சலசலப்பை ஏற்படுத்தியது.
இதையடுத்து தவெகவில் இருந்து விலகுவதாக வைஷ்ணவி தனது X பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுருந்தார். அதில் இந்த சமூகத்தில் மாற்றம் ஒன்று மலராதா என்றே எனது அரசியல் பயணத்தை தவெகவில் தொடர்ந்தேன். ஆனால், தொடர்ந்து நிராகரிப்பை மட்டுமே சந்தித்தேன். கடந்த ”மூன்று மாதங்களாக மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளேன்”.
என் வளர்ச்சியைத் தடுப்பதாக நினைத்து, கட்சியின் வளர்ச்சியை தடுக்கச் சிலர் செயல்படுகிறார்கள். மேலும் பெண் என்பதால் தொடர்ந்து நிராகரிக்கப்பட்டேன். இதுகுறித்து கட்சி தலைமையிடம் தெரிவித்தும் எந்த விதமான பதிலும் வரவில்லை” எனத் தெரிவித்து தனது விலகலை அவர் அறிவித்துள்ளார்.
இந்நிலையில் செய்தியாளர்கள் சந்திப்பில் பாஜக எம்.எல்.ஏ.வானதி சீனிவாசனிடம் இதுகுறித்து சேள்வி எழுப்பட்டது, அதற்கு பதில் அளித்த அவர் “பெண்கள் தங்கள் வாழ்க்கையை அரசியலுக்கு அர்ப்பணிக்க நினைக்கும்போது, தங்கள் குடும்பத்தில் இருந்தும், சமூதாயத்தில் இருந்தும் எளிதாக ஆதரவு வராது. ஆனால் இதனை எல்லாம் தாண்டி அரசியல் என்பது மக்களுக்கு சேவை செய்யக்கூடியது எனும் உறுதி இருந்தால், எத்தகைய தடையையும் நம்மால் தாண்ட முடியும்.
எனவே சகோதரி உண்மையாக மக்களுக்காக பணியாற்ற அரசியலுக்கு வரவேண்டும் என நினைத்தால் எங்கள் கட்சிக்கு தாராளமாக வரலாம்” எனத் தெரிவித்தார்.