
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பிறகு, பாகிஸ்தான் மீது இந்தியா கடும் நடவடிக்கைகள் எடுத்து வரும் நிலையில், இரு நாடுகளுக்கும் இடையிலான சிந்து நதிநீர் ஒப்பந்தம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது
இந்த முடிவைத் தொடர்ந்து, பாகிஸ்தான் அரசியல் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகிறது
இந்நிலையில், இந்தியா சிந்து நதியின் நீரைத் தடுப்பதற்கு அல்லது திசை மாற்றும் வகையில் அணை கட்ட முயற்சித்தால், அதை உடனடியாக அழிப்போம் என பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிஃப் எச்சரித்துள்ளார்.
தனியார் தொலைக்காட்சிக்கு பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் வழங்கிய பேட்டியிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்
மேலும், சிந்து நதியின் நீரை திசை திருப்புவதற்கான எந்த முயற்சியில் இந்தியா இறங்கினாலும் அதை பாகிஸ்தான் மீதான தாக்குதலாகவே கருதுமோம் என்றும் அவர் வலியுறுத்தினார்.
சிந்து நதிநீர் தடை பாகிஸ்தானின் விவசாய பொருளாதாரத்தில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும் என்றும், நீண்டகால நெருக்கடிக்கு வழிவகுக்கும் என்றும் நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
இதேவேளை, பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீப், இந்தியா தண்ணீரை நிறுத்தும் எந்தவொரு முயற்சியையும் போர் நடவடிக்கையாக” கருதுவதாகக் கூறியிருந்தார். அதே போல் பாகிஸ்தான் முன்னாள் வெளியுறவு அமைச்சர் பிலாவல் பூட்டோ சர்தாரி, “சிந்து நதியில் தண்ணீர் ஓடவில்லை என்றால், இரத்தம் ஓடும்” என கூறியிருந்ததும் குறிப்பிடத்தக்கது