பொன்முடிக்கு மீண்டும் அமைச்சு பதவியை  வழங்க கோரி  தீக்குளிக்க முயன்ற  கவுன்சிலர்!

பொன்முடிக்கு மீண்டும் அமைச்சு பதவியை வழங்க கோரி தீக்குளிக்க முயன்ற கவுன்சிலர்!

அமைச்சர் பொன்முடிக்கு மீண்டும் பதவியை வழங்க கோரி திமுகவினர் வாகனங்களை  எரித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் 

தமிழக அமைச்சரவை மாற்றத்தின் போது, அண்மையில் சர்சசைகளுக்குள்ளான  வனத்துறை அமைச்சர் பொன்முடி மற்றும் செந்தில் பாலாஜி ஆகியோர் பதவியில் இருந்து நீக்கப்பட்டனர் 

இந்த முடிவு விழுப்புரம் மாவட்ட தி.மு.க.வினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில்  இதனை எதிர்த்து திருவெண்ணை நல்லூர் கடை வீதியில், பேரூராட்சி மன்ற துணை தலைவர் ஜோதி தலைமையில் தி.மு.க.வினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்

போராட்டத்தின் போது, தி.மு.க. நிர்வாகி குணா தனது மோட்டார் சைக்கிளை சாலையில் போட்டு தீ வைத்து எரித்துள்ளார். இதையடுத்து, திருவெண்ணை நல்லூர் பேரூராட்சி 15-வது வார்டு கவுன்சிலர் பாக்கியராஜ் திடீரென கையில் வைத்திருந்த மண்எண்ணெயை தன் மீது ஊற்றி தீக்குளிக்க முயன்றுள்ளார் . இதைக் கண்ட மற்ற நிர்வாகிகள் உடனே அவரை தடுப்பது காப்பாற்றியுள்ளனர் 

இந்த சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும், திருவெண்ணை நல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மைக்கேல் இருதயராஜ் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து போராட்டக்காரர்களை சமாதானம் செய்து  அவர்களை அங்கிருந்து அனுப்பி வைத்துள்ளனர்.

மேலும் தீக்குளிக்க முயன்ற கவுன்சிலர் பாக்கியராஜ் உடனடியாக மீட்கப்பட்டு, சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தெரிவவிக்கப்பட்டுள்ளது