
அண்மையில் கோயம்புத்தூரில் தவெக பூத் கமிட்டி மாநாடு நடைபெற்றது. இதில் பங்கேற்பதற்காக கோயம்புத்தூர் சென்ற தவெக தலைவர் விஜய்க்கு விமான நிலையத்தில் தொண்டர்கள் உற்சாக வரவேற்பை அளித்தனர்.
இதையடுத்து விமான நிலையத்திலிருந்து மாநாடு நடக்கும் இடத்திற்கு சாலை வழியாக சென்ற விஜய், அலைமோதும் மக்கள் வெல்லத்தில் இடையே ரோடு ஷோ நடத்தினார்.
கட்டுங்காத தவெக தொண்டர்கள் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் ஒரு புறம் காவல் துறையினர் திணற, மறுபுறம் ரோடு ஷோ நடத்திய விஜய்யின் வாகனத்தின் மீது ஏறியும், சாலை ஓரம் இருக்கும் மரத்தின் மீது ஏறியும் தவெக தொண்டர்கள் அராஜகம் செய்தனர்.
மேலும் தலைக்கவசம் அணியாமல் இருச்சக்கர வாகனத்தில் வேகமாக விஜய்யின் வாகனத்தை பின் தொடர்ந்து கீழே விழுந்து விபத்துக்குள்ளாகினர்.
இதை எல்லவற்றையும் கவனித்த விஜய், நேற்று தனது X பக்கத்தில் தவெக தொண்டர்களுக்கு அன்போடு கண்டித்து பதிவை ஒன்றை வெளியிட்டுருந்தார். அதில் இனிவரும் நிகழ்ச்சிகளில் எனது வாகனத்தின் மீதி ஏறுவது, வாகனத்தை பின் தொடர்வது, பொது மக்களுக்கு இடையூறு தருவது போன்ற அநாகரிகமான செயல்களில் தவெக தொண்டர்கள் ஈடுபடக் கூடாது எனக் கட்டளை இட்டுயிருந்தார்.
இந்நிலையில் ஜனநாயனகன் திரைப்படம் படப்பிற்காக கொடைக்கானல் செல்வதற்காக சென்னை விமான நிலையம் வந்து அடைந்தார்.
கட்சி தொடங்கியதிலிருந்து ஒருமுறை கூட செய்தியாளர்களை சந்திப்பில் சந்திக்காத தவெக தலைவர் விஜய், இன்று செய்தியாளர்களை சந்திந்து “ நான் ஜனநாயனகன் படப்பிற்காக கொடைக்கானல் செல்கிறேன், யாரும் என்னை பின் தொடர்ந்து வராதீர்கள் . வாகனத்தில் வேகமாக பின் தொடர்வதை பார்த்தால் பதட்டமாக இருக்கிறது. வேறொரு நாள் வந்து மதுரை மக்களை சந்திக்கிறேன் என்று தவெக தொண்டர்களுக்கு மீண்டும் ஒருமுரை அறிவுரை வழங்கினார்.
மதுரையிலிருந்து சாலை மார்கமாக கொடைக்கானல் செல்ல திட்டமிட்டுருந்த விஜய்க்கு மதுரை விமான நிலையத்தில் பொது மக்கள் மற்றும் தவெக தொண்டர்கள் அளித்த உற்சாக வரவேற்பை ஏற்றுக் கொண்ட விஜய். 5 கிலோ மீட்டர் தூரம் மீண்டும் ரோடி ஷோ நடத்தினார்.
ஆனால் விஜய்யின் கட்டளையை மீறி தவெக தொண்டர்கள் மீண்டும் காரின் மீது ஏறி அராஜகம் செய்தனர்.
விஜய்யின் கட்டளையை மீறி தவெக தொண்டர்கள் செய்த செயலால், விஜய்யின் அன்பு கட்டளை கேள்விக்குரியாகி உள்ளது.