ஊட்டியில் போலீஸ் நிலையத்துக்குள் புகுந்த சிறுத்தை!

ஊட்டியில் போலீஸ் நிலையத்துக்குள் புகுந்த சிறுத்தை!

நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகே உள்ள நடுவட்டம் பகுதியில்  போலீஸ் நிலையத்துக்குள்ளே சிறுத்தை புகுந்த அதிர்ச்சி சம்பவம் இடம்பெற்றுள்ளது.

ஊட்டி  மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் வனவிலங்குகளின் நடமாட்டம் நாளுக்குநாள் அதிகரித்து வரும் நிலையில், சம்பவத்தன்று இரவு ஊருக்குள் நுழைந்த சிறுத்தை  நடுவட்டம் போலீஸ் நிலையத்துக்குள் நுழைந்ததுள்ளது

இந்த சம்பவம் போலீஸ் நிலையத்தில் உள்ள சி.சி.டி.வி. கேமராவில்  பதிவாகியுள்ளது 

அதில் சிறுத்தையானது போலீஸ் நிலையத்திலுள்ள  ஒவ்வொரு அறைக்குள்ளும் புகுந்து ,  உணவு தேடுவதையும் , பின்னர் எதுவும் கிடைக்காததால் ஏமாற்றத்துடன் மெதுவாக வெளியே செல்வதையும் அவதானிக்க முடிகின்றது 

இந்த சம்பவம் அப்பகுயில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் தற்போது இந்தக் காட்சிகள் இணையத்தில் வேகமாக பரவி, வைரலாகி வருகின்றன

இந்த சம்பவம் குறித்து நடுவட்டம் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் கூறுகையில், “சமீபகாலமாக எங்கள் பகுதியில் சிறுத்தை, கரடி உள்ளிட்ட வனவிலங்குகள் அதிகம் நடமாடுகின்றன. இதனால் மக்கள் இடையே அச்சம் நிலவுகிறது.

வனத்துறையினர் இந்த பகுதிகளில் அடிக்கடி ரோந்து நடத்தி, விலங்குகளின் நகர்வுகளை கண்காணிக்க வேண்டும். குறிப்பாக குடியிருப்பு பகுதிகளில் வனவிலங்குகள் நுழையாமல் தடுக்கும் நடவடிக்கைகள் தீவிரமாக எடுக்கப்பட வேண்டும்,” எனக் கூறுகிறார்கள்.