
நேற்று நடைபெற்ற ஐபிஎல் (2025) போட்டியின் 43 லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வென்றது.
ஐபிஎல் போட்டியின் 30 வது லீக் ஆட்டமான சென்னை சூப்பர் கிங்ஸ் – சன்ரைசர்ஸ் ஹைதராபாத் இடையிலான போட்டி நேற்று சென்னை சேப்பாக் மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற ஹைதராபாத் அணி முதலில் பேட்டிங் செய்யுமாறு சென்னை அணியை அழைத்தது, சென்னை அணியின் தொடக்க ஆட்டகாரர்களாக ஷேக் ரசீத் மற்றும் ஆயுஷ் மாத்ரே களமிறங்கினர்.
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஷேக் ரசீத் ஷமி வீசிய முதல் பந்திலியே விக்கெட்டை இழந்து வெளியேறினார். அடுத்த வந்த சாம் கரனும் பெரிதாக ரன் அடிக்காமல் சொர்ப ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்ததாக ஜோடி சேர்ந்த ஆயுஷ் மாத்ரேவும் ஜடேஜாவும் அதிரடியாக விளையாட ரன் குவிக்கும் வேகம் அதிகரித்தன. இருப்பினும் இருவரும் நிலைத்து ஆட முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டை கொடுத்து வெளியேறினர்.
ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கபட்ட பேபி ஏபி என அழைக்கப்படும் டெவால் ப்ரெவிஸ் தனது முதல் போட்டியிலியே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். கமிந்து மெண்டிஸ் வீசிய 12வது ஓவரில் மூன்று சிக்சர்களை விளாசி ஆட்டத்தின் போக்கை மாற்றினார்.
சிறப்பான தொடக்கம் கிடைத்தும் டெவால் ப்ரெவிஸ்ஸால் சரியாக பயன்படுத்த முடியவில்லை, ஹர்சல் பட்டேல் வீசிய 13 ஓவரில் தூக்கி அடிக்க முயன்று கேட்ச் கொடுத்து வெளியேறினார். அடுத்ததாக வந்த யாரும் நிலைத்து நிற்காமல் அடுத்தடுத்து விக்கெட்டை கொடுத்து வெளியேறினார்கள்.
நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் சிஎஸ்கே அணி அனைத்து விக்கெட்டையும் இழந்து 154 ரன்கள் சேர்த்தது.
155 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய ஹைதராபாத் அணியின் தொடக்க ஆட்டகார்களாக அபிஷேக் சர்மா மற்றும் டிராவிஸ் ஹெட் ஆகியோர் களமிறங்கினர். இந்த தொடர் முழுவதுமே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியாமல் தவிக்கும் ஹதராபாத் அணியின் பேட்ஸ்மேன்கள், இந்த போட்டியிலும் சொதப்பினர்.
ஒருபுறம் விக்கெட்டை இழந்தாலும் மறுபுறம் இஷான் கிஷன் நிலைத்து நின்று அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றார். 34 பந்துகளில் 44 ரன்கள் எடுத்த நிலையில் நூர் அகமது வீசிய சுழல் பந்தில் இஷான் ஆட்டமிழந்து வெளியேறினார்.
இருப்பினும் குறைந்த ரன்னே இலக்கு என்பதால், ஹைதராபாத் அணியின் வெற்றி எளிதாக அமைய வழிவகுத்தது,. 155 என்ற இலக்கை 18 ஓவரில் ஹைதராபாத் அணி எட்டிப்பிடித்தது.
இந்த வெற்றியின் மூலம் புள்ளிப்பட்டியலில் 8 வது இடத்திற்கு ஹைதரபாத் அணி முன்னேறியது.
இந்த தொடரில் மீதமுள்ள ஆறு போட்டிகளிலும் வெற்றி பெற்றால் தான் சிஎஸ்கே அணி பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறும் என்று இருந்த நிலையில், அதில் ஹைதராபாத் அணியியுடன் தோல்வியை சந்தித்துள்ளது.
இந்த ஐபிஎல் சீசன் தொடக்கத்தில் இருந்தே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தாத சிஎஸ்கே அணி இந்த தோல்வியின் மூலம் தொடரிலிருந்து வெளியேறுவதை உறுதி செய்துள்ளது.
இருப்பினும் பிளே ஆஃப் செல்வதற்கு சிஎஸ்கே அணிக்கு இன்னும் ஒரு வாய்ப்பு மீதம் உள்ளது, ஆனால் அதில் 50 % வெற்றி வாய்ப்பு மட்டும் தான் சிஎஸ்கேவிடம் உள்ளது. ஏனென்றால் சிஎஸ்கே அணி மீதமுள்ள 5 போட்டிகளிலும் சிறப்பான வெற்றியை பெற்றாலும், மற்ற அணிகளின் வெற்றி தோல்வியை வைத்து தான் முடிவு செய்ய முடியும்.
வரும் போட்டிகளில் புள்ளிப்பட்டியலில் முதல் மூன்று இடத்தில் இருக்கும் அணிகள் மட்டுமே தொடர்ந்து வெற்றி பெற்றால் தான் சிஎஸ்கே அணி பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற முடியும்.
சிஎஸ்கே அணியை பொறுத்த வரையில், இந்த சீசனில் தொடக்கம் முதலே சொதப்பி வருகிறது . அணியில் பல மாற்றங்கள் செய்தும், எதுவுல் பலன் அளிக்கவில்லை.
ஏலத்தில் பலகோடி கொடுத்து வாங்கிய மூத்த வீரர்கள் யாரும் இந்த சீசனில் சிறப்பாக விளையாடவில்லை என்ற விரக்கதியில் சென்னை அணி நிர்வாகமும், ரசிகர்களும் உள்ளனர். அதனால் வரும் போட்டிகளில் மூத்த வீரர்களை தவிர்த்துவிட்டு முழுவதுமாகவே இளைஞர் பட்டாளமாக களமிறங்க வேண்டும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.
சிஎஸ்கே அணி மீதமுள்ள போட்டிகளில் வெற்றி பெறுமா, மற்ற அணிகளின் வெற்றி தோல்வி சிஎஸ்கே பிளே ஆஃப் செல்வதற்கு உதவுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.