பட்டாசு ஆலையில் நடந்த வெடி விபத்தில் மூன்று பேர் உடல் கருகி உயிரிழப்பு!

பட்டாசு ஆலையில் நடந்த வெடி விபத்தில் மூன்று பேர் உடல் கருகி உயிரிழப்பு!

சிவகாசி அருகே பட்டாசு   பட்டாசு ஆலையில் நடந்த வெடி விபத்தில் 3 பேர் உடல் கருகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே  ராஜரத்தினம் என்பவருக்குச் சொந்தமான ஸ்டாண்டர்ட் தனியார் பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டுள்ளது  

80க்கும் மேற்பட்ட அறைகள் கொண்ட இந்த ஆலையில் நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தினமும் பணியாற்றி வருகின்றனர்.

 வழக்கம்போல் தொழிலாளர்கள் பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த போது,  ரசாயன கலவையில் தவறுதலாக ஏற்பட்ட உராய்வினால் இந்த  வெடி விபத்து நேர்ந்துள்ளதாக கூறப்படுகின்றது

இந்த விபத்தில் மூன்று பெண் தொழிலாளர்கள் உடல் கருகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

மேலும், 7 பெண்கள் பலத்த காயங்களுடன்  தற்போது சிவகாசி அரசு மருத்துவமனையில்  அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

விபத்தையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற, சிவகாசி தீயணைப்பு துறை வீரர்கள் விரைந்து  தீயை கட்டுப்படுத்தியுள்ளனர்

மேலும் வெடி விபத்து நடந்த இடத்தில் காவல்துறையினர் மற்றும் வருவாய்த் துறையினர் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார் .

மேலும், உயிரிழந்த தொழிலாளர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 4 லட்சம், பலத்த காயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ. 1 லட்சம் மற்றும் லேசான காயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ. 50,000 முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடதக்கது