பஹல்காம் தாக்குதல் எதிரொலி; பாகிஸ்தானுடன் இனிமேல் போட்டியே இல்லை- பிசிசிஐ அதிரடி அறிவிப்பு

பாகிஸ்தானுடன் இனிமேல் போட்டியே இல்லை- பிசிசிஐ அதிரடி அறிவிப்பு

இனிவரும் காலங்களில் இந்தியா- பாகிஸ்தான் இடையே இருதரப்பு போட்டி நடைபெறாது என பிசிசிஐ அதிரடி அறிவிப்பு.

காஷ்மீர் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலாப் பயணிகள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம், நாடு முழுவதும் பெரும் அதிவலையை ஏற்படுத்தியுள்ளது.

இதையடுத்து இந்தியா -பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே வணிகம்,தூதரக உறவுகள், எல்லை பங்கீடு உள்ளிட்ட பல்வேறு தடை மற்றும் எதிர்ப்பு நடவடிக்கைகளை இரு நாடுகளும் அதிரடியாக தொடர்ந்து வருகின்றன.

இந்நிலையில் பஹல்காம் தாக்குதலுக்கு இந்திய கிரிக்கெட் வாரியமான பிசிசிஐ கடும் கண்டனம் தெரிவித்துள்ளது, இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய பிசிசிஐ துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா கூறியாதவது,

“நாங்கள் பாதிக்கப்பட்டவர்களுடன் உள்ளோம். இந்த தாக்குதலை வன்மையாக கண்டிக்கிறோம். எங்கள் அரசாங்கம் என்ன சொல்கிறதோ அதை தான் செய்வோம். எங்கள் அரசாங்கம் முடிவின் காரணமாகத்தான் பாகிஸ்தான் அணியுடன் இருதரப்பு கிரிக்கெட் போட்டியில் விளையாட மறுத்து, ஐசிசி தொடர்களில் மட்டும் விளையாடி வருகிறோம். இங்கு என்ன நடக்கிறது என்று ஐசிசிக்கும் நன்றாக தெரியும்” என தெரிவித்தார். மேலும் இனிவரும் காலங்களில் பாகிஸ்தானுடன் இருதரப்பு போட்டி நடைபெறாது கூறினார்.

இறுதியாக கடந்த 2012- 2013 ஆண்டில் இந்தியா -பாகிஸ்தான் இடையே இருதரப்பு போட்டி நடைபெற்றது. அந்த போட்டியில் பாகிஸ்தான் அணி இந்தியா வந்து ஒரு நாள் தொடரை  விளையாடியது. அதே போல் 2008ஆம் ஆண்டு பாகிஸ்தானுக்கு சென்று இந்திய அணி விளையாடியது.அதன் பிறகு இந்திய அணி பாகிஸ்தான் செல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இனி வரும் காலங்களிலும் பாகிஸ்தான் உடன் இருதரப்பு போட்டி நடைபெறாது என பிசிசிஐ துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா உறுதிபடுத்தியுள்ளார்.