
ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் நேற்று முன்தினம் நடந்த பயங்கரவாத தாக்குதல் நாட்டையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.
சுற்றுலா பயணிகள் மீது வெறித்தனமாக நடத்தப்பட்ட இந்த துப்பாக்கிச் சூட்டில் 26 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்த தாக்குதலுக்குப் பாகிஸ்தானில் செயல்படும் பயங்கரவாத அமைப்பு தான் காரணம் என்பது தெரியவந்துள்ளதால், பாகிஸ்தான் மீது பல்வேறு நடவடிக்கைகளை இந்தியா எடுத்து வருகிறது.
அதன் ஒருபகுதியாக, பாகிஸ்தானுக்கு செல்லும் சிந்து நதி நீரை இந்தியா நிறுத்தியுள்ளது. இந்தியாவின் இந்த நடவடிக்கைகளுக்கு பதிலளிக்கும் வகையில் பாகிஸ்தான் அரசும் தீவிர முடிவுகளை எடுத்து வருகிறது.
அதாவது இந்தியர்கள் பயணிக்க பயன்படும் சார்க் விசாக்களை ரத்து செய்ததோடு, இந்திய தூதரக அதிகாரிகளை அங்கீகரிக்கப்படாத நபர்களாகவும் அறிவித்துள்ளது மேலும், இந்திய விமானங்களுக்கு பாகிஸ்தானின் வான்வெளியில் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
இது இவ்வாறிருக்க பாகிஸ்தான் மற்றும் இந்தியாவிடையே போரை நிறுத்தும் வகையிலும் நட்புறவை மேம்படுத்தும் வகையிலும் 1972ம் ஆண்டு போடப்பட்ட சிம்லா ஒப்பந்தத்தை நிறுத்தி வைப்பதாக பாகிஸ்தான் தற்போது அதிரடியாக அறிவித்துள்ளது..
இந்த ஒப்பந்தம் இரத்து செய்யப்பட்டுள்ள விவாகாரம் இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையிலான நட்பு மற்றும் அமைதியின் வாயிலாக பிரச்சனைகளை தீர்க்கும் முயற்சிகளை முற்றிலும் கேள்விக்குறியாகியுள்ளது.
இந்த நிலையில் இந்தியா பதிலடி கொடுத்தால் அதை எதிர்கொள்வதற்கு தயார் நிலையில் இருக்குமாறு பாகிஸ்தானின் ராணுவத்தினருக்கு அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளமையும் குறிப்பிடதக்கது.