UPSC தேர்வில் நான் முதல்வன் திட்டத்தில் பயின்ற சிவச்சந்திரன் முதலிடம்!

upsc தேர்வில் நான் முதல்வன் திட்டத்தில் பயின்ற சிவச்சந்திரன் முதலிடம்!

தேசிய குடிமைப்பணி தேர்வு முடிவு இன்று வெளியாகி உள்ளது, இதில் தமிழகத்தை சேர்ந்த 50 மாணவர்கள் தேர்ச்சி பெற்று சாதணை படைத்துள்ளனர்.

ஐஏஎஸ் (IAS), ஐபிஎஸ் (IPS), ஐஎஃபெஸ் (IFS), ஐஆரெஸ்(IRS) உள்ளிட்ட குடிமை பணிகளுக்கான இடங்களை நிரப்ப, மத்திய பணியாளர் தேர்வாணையம் UPSC தேர்வை நடத்தி வருகிறது. இதில் நிலைத்தேர்வு, முதன்மை தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு என 3 நிலை தேர்வுகள் இருக்கின்றன.

இந்த தேர்வானது, ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே நடத்தப்படும், அதன்படி கடந்த 2024 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 16 ஆம் தேதி முதல் நிலைத்தேர்வும், செப்டம்பர் மாதம் முதன்மை தேர்வும், இந்த ஆண்டு ஜனவரி முதல் ஏப்ரல் மாதம் வரை நேர்முகத்தேர்வும் நடைபெற்றது.

இன்று இந்த தேர்வுகளின் முடிவு வெளியாகி உள்ள நிலையில் , இந்த தேர்வை எழுதியவர்களில் 1009 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் உத்திர பிரதேசதம் மாநிலத்தை சேர்ந்த சக்தி துபே என்ற மாணவர் தேசிய அளவில் முதலிடத்தை பிடித்துள்ளார்.

தமிழ்நாடு அரசின் நான் முதல்வன் திட்டத்தில் பயின்ற சிவச்சந்திரன் என்ற மாணவன் தமிழக அளவில் முதலிடமும், தேசிய அளவில் 23 வது இடமும் பிடித்து அசத்தியுள்ளார். நான் முதல்வன் திட்டத்தின் கீழ் பயிற்ச்சி பெற்ற 134 பேரில் 50 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

தமிழ் நாட்டில் தேர்ச்சி பெற்ற 50 பேரில் 18 பேர் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் முழு நேர பயிற்சி பெற்றவர்கள் ஆவர். தேசிய அளவில் 39 வது இடத்தை பெற்ற மோனிகாவும் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் படித்தவர் ஆவார்.மேலும் தமிழ் வழியில் தேர்வு எழுதிய காமராஜ் மற்றும் சங்கரபாண்டியன் ஆகியோரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

இதையடுத்து முதல்வர் முக.ஸ்டாலின் சிவச்சந்திரன்  உட்பட வெற்றி பெற்ற அனைத்து மாணவர்களுக்கும் வாழ்த்துகள் தெரிவித்தார். மேலும் பல்லாயிரக்கணக்கான மாணவர்களின் திறன்களை மேம்படுத்தும் இந்த நான் முதல்வன் திட்டம், வருங்காலங்களில் இலட்சக்கணக்கானோரின் வாழ்வில் ஒளியேற்றிடும் என்ற நம்பிக்கை எனக்கு மகிழ்ச்சியாகியுள்ளது!” என்று தனது X பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

வேலைவாய்ப்பு, உயர்கல்விக்கான வழிகாட்டுதல்,போட்டித் தேவுர்வுகளுக்கு உதவி செய்தல் மற்றும் தொழில் முனைவோராக மாறுவதற்கு பயிற்சி அளித்தல் உள்ளிட்டவற்றை மேற்கொள்வதற்காக தமிழ்நாடு அரசு சார்பில் கடந்த 2021 ஆம் ஆண்டு நான் முதல்வன் திட்டம் முதல்வர் முக.ஸ்டாலின் அவர்களால் தொடங்கி வைக்கப்பட்டது. இந்த திட்டத்தின் மூலம் இதுவரை 28 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளன.