காஷ்மீர்  பயங்கரவாத  நடத்தியவர்களின் வரைபடங்கள் வெளியீடு

காஷ்மீர் பயங்கரவாத நடத்தியவர்களின் வரைபடங்கள் வெளியீடு!

ஜம்மு காஷ்மீரின் புகழ்பெற்ற சுற்றுலா மையமான பஹல்காம் பகுதியில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதல் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

சுற்றுலாப் பயணிகளை குறிவைத்து மேற்கொள்ளப்பட்ட இந்த தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த தாக்குதலுக்குப் பிறகு சம்பவ இடத்திற்கு நேரில் சென்று பார்வையிட்ட மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, ஜம்மு காஷ்மீர் முதல்-மந்திரி உமர் அப்துல்லா மற்றும் பாதுகாப்பு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியுள்ளார்.

தற்போது ராணுவத்தினர் மற்றும் போலீசார் இணைந்து  தீவிர சோதனை நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.மேலும் டிரோன்கள், மோப்ப நாய்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள் மூலம் மலைப் பகுதிகளில் தீவிர கண்காணிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பாகிஸ்தானை தளமாகக் கொண்ட லஷ்கர்-இ-தொய்பாவின் நட்பு அமைப்பான ‘தி ரெசிஸ்டன்ஸ் ப்ரண்ட்’ (TRF)  என்று அமைப்பு பொறுப்பு ஏற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில், தாக்குதலில் ஈடுபட்டவர்களாக சந்தேகிக்கப்படும் நபர்களின் வரையப்பட்ட  புகைப்படங்களை ஜம்மு காஷ்மீர் போலீசார் வெளியிட்டுள்ளனர்

மொத்தம் ஆறு பேர் இந்த தாக்குதலில் ஈடுபட்டதாக கூறப்பட்டும் நிலையில்   அஷிப் பவுஜி, சுலைமான் ஷா, அபுத் தல்ஹா ஆகிய 3 நபர்களின் விவரங்களை பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்

தற்போஇந்த தாக்குதலுக்கு இந்திய அரசு எவ்வாறு பதிலடி கொடுக்கவுள்ளது என்பது குறித்து நாடு முழுவதும் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது