இனி UPI&ATM மூலம் PF பணத்தை எடுக்கலாம்,வெளியான EPFO-ன் புதிய அறிவிப்பு

EPFO New Rules

EPFO பயனாளர்கள் இனி வரும் காலங்களில், தங்களது வைப்பு நிதியை(PF) ATM கார்டு மற்றும் UPI செயலிகளான Gpay,Phonepe,Paytm மூலம் எடுத்து கொள்ளலாம். இதற்கான அறிவிப்பு  EPFO 3.0 ல் வெளியாகி உள்ளது.

EPFO 3.0 என்றால் என்ன

இந்தியா முழுவதும் சம்பளம் பெறும் ஊழியர்களின் நிதியை பாதுகாப்பதில் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) பெரும் பங்களிப்பை ஆற்றி வருகிறது. தற்போது EPFO 3.0 உடன் EPFO டிஜிட்டல் தகவல் தொழில்நுட்பத்தை மேம்படுத்தி வருகிறது. EPFO 3.0-ன் முக்கிய அம்சம் EPFO ATM கார்டு ஆகும்.மேலும் UPI செயலிகள் மூலமும் ஊழியர்கள் தங்களது  வைப்பு நிதி (PF) பணத்தை எளிதாக பெற வழிவகுக்கிறது. தற்போது PF பணத்தை எடுக்க வேண்டும் என்றால்” UMANG” செயலி அல்லது www.epfindia.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்து குறைந்தது 10 முதல் 20 நாட்கள் காத்திருக்கிறார்கள். இந்த சிரமத்தை தீர்க்கவே இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

EPFO ATM கார்ட் எப்படி வேலை செய்கிறது?

ஊழியரின் EPFO ATM கார்ட் ஒரு டெபிட் கார்ட் போன்றது, அது ஊழியர்களின்  PF கணக்குடன் நேரடியாக இணைக்கப்பட்டிருக்கும். அதன் பிறகு 24 மணி நேரமும் , எந்த ஒரு ஏடிஎம் இயந்திரத்திலும் பணம் எடுக்க முடியும்.இது எந்த ஒரு விண்ணப்பம் இல்லாமலும், EPFO அலுவலகத்தின் ”அதிகாரப்பூர்வ ஒப்புதல்” போன்ற எந்த ஒரு இடைத்தரகர் இல்லாமலும் இனி பயனர்கள் வைப்பு நிதியை எடுக்க முடியும்.

UPI மூலம் PF பணம்

EPFO ATM  கார்டை தொடர்ந்து யுபிஐ மூலமும் வைப்பு நிதி பணத்தை எடுக்கும் புதிய அம்சத்தை EPFO அறிவிக்க உள்ளது. மேலும் இந்த புதிய வசதியை செயல்படுத்த இந்திய தேசிய கொடுப்பனவுக்கு கழக்கத்துடன் ((NPCI) பேச்சுவார்த்தை நடந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த வசதி அடுத்த மூன்று அல்லது நான்கு மாதத்தில் செயலில் வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

EPFO 3.0 நன்மைகள்

EPFO ​​ATM கார்டு மூலம், ஊழியர்கள் உடனடியாக பணத்தை எடுத்துச் செல்லலாம், மேலும் கிராமப்புறங்களில் இருப்பவர்களுக்கு மிகவும் பயன் உள்ளதாக இருக்கும்.

●  EPFO ATM கார்டு மூலம் ஊழியர்கள் உடனடியாக பணம் எடுத்துக் கொள்ள முடியும்.

● ஊழியர்கள் தங்கள் பெயர், பிறந்த தேதி, திருமண நிலை போன்ற தகவல்களை உடனடியாக புதுப்பிக்க முடியும்.

●  ஆதார் OTP மூலம் PF பரிமாற்றங்களை செயற்படுத்த முடியும், இதனால் முதலாளி சரிபார்ப்பு தேவையற்றது.

● அனைத்து பதிவுகளும் மின்னணு முறையில் இருப்பதால் கணக்கு மேலாண்மை எளிதாக செயல்படுகிறது.

● சுய-சான்றொப்ப அம்சம் விரைவான KYC நிறைவேற்றத்திற்காக பயன்படுகிறது.

● EPFO இணையதளம் புதிய, பயனுள்ள வடிவமைப்புடன் உள்ளது.

● திரும்பப் பெறும் வரம்புகள் நீக்கப்பட்டு, ஊழியர்கள் தங்கள் PF வைப்பு நிதியை எதிர்காலத்திற்கு பயன்படுத்த முடியும்.

● திரும்பப் பெறும் கோரிக்கைகள் விரைவாக செயல்படுத்தப்படுகின்றன.

● EPFO ATM கார்டு 24 மணி நேரமும் ATM-இல் பணம் எடுத்துக் கொள்ள உதவுகிறது.

● PF கணக்குகளில் டிஜிட்டல் பரிவர்த்தனைகளை அனுமதிக்கும் புதுப்பிப்புகள் திட்டமிடப்பட்டுள்ளது.

● EPFO ATM கார்டில் PIN அம்சம் மற்றும் அங்கீகாரத்துடன் பரிவர்த்தனைகள் பாதுகாக்கப்படுகின்றன.

EPFO செயல்முறைகள் எளிதாக்கப்பட்டுள்ளன, இதனால் முதலாளி சரிபார்ப்புகள் தேவை. EPFO 3.0 என்பது  வருங்கால வைப்பு நிதி அமைப்பின் ஒரு புரட்சிக்கரமான மேம்படுத்தப்பட்ட டிஜிட்டல் அணுகுமுறை ஆகும். இந்த நவீனமயமாக்கலால் ஊழியர்கள் இனி வரும் காலங்களில் தங்கள் சேமிப்பு வைப்பு நிதியை( PF) தேவைப்படும் போதெல்லாம் ,எந்த விதமான நேர தாமதமின்றி பெற்றுக்கொள்ளலாம்.