
மாநிலங்களவை உறுப்பினராக அண்ணாமலை தேர்ந்தெடுக்கப்பட வாய்ப்புள்ளதாக அரசியல் வட்டாரங்களில் பேச்சுக்கள் எழுந்துள்ளன
தமிழக பாஜகவின் முன்னாள் தலைவராக கடந்த மூன்று ஆண்டுகளாக செயல்பட்டு வந்த அண்ணாமலையின் பதவிக்காலம் சமீபத்தில் முடித்திருந்தது. அதன் பின்னர் நடைபெற்ற பாஜக மாநிலவை தலைவர் போட்டியில் நயினார் நாகேந்திரன் புதிய தலைவராக தேர்வானார்.
பின்னர் அண்ணாமலையின் திறன்களை பாஜக பயன்படுத்தும் என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா அறிவித்திருந்த நிலையில், அண்ணாமலைக்கு தேசிய பொதுக்குழு உறுப்பினராக பதவி வழங்கப்பட்டது.
இந்நிலையில், தற்போது அண்ணாமலை ஆந்திராவின் மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார் என்ற தகவல்கள் அரசியல் வட்டாரங்களில் பரவியுள்ளன.
கடந்த ஜனவரி மாதம் YSR காங்கிரஸ் கட்சி மாநிலங்களவை உறுப்பினர் விஜய் சாய் ரெட்டி தனது சொந்த காரணங்களுக்காக நாடாளுமன்ற உறுப்பினர் பொறுப்பில் இருந்து விலகுவதாக தனது பதவியை ராஜினாமா செய்தார்
அவரது பதவிக்கு இன்னும் மூன்று ஆண்டு காலம் மீதமிருக்கும் நிலையில் தெலுங்கு தேசம் கட்சி, அந்த பதவியை தங்களது கட்சியைச் சார்ந்தவருக்கே வழங்க வேண்டும் என வலியுறுத்தி வந்தது
இருப்பினும், பாஜக தலைமையகம் எடுத்த முடிவின் அடிப்படையில், அந்த இடத்திற்கு அண்ணாமலையின் பெயர் பரிசீலனையில் இருக்கிறது என்பதும், அதற்கான இறுதி ஒப்புதல் பெற்று விட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில் தான், இந்த பதவி அண்ணாமலைக்கு வழங்கப்படும் என ஆந்திரா அரசியல் வட்டாரத்திலும் பேசப்பட்டு வருகிறது.
இது தொடர்பான உயர்மட்ட பேச்சுவார்த்தை முடிந்து விட்டதாகவும் . விரைவில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.