சிஎஸ்கே அணி பிளே ஆஃப் செல்வதற்கு வாய்ப்பு உள்ளதா?

சிஎஸ்கே அணி பிளே ஆஃப் செல்வதற்கு வாய்ப்பு உள்ளதா

நேற்று நடந்த போட்டியில் மும்பை அனியிடம் தோல்வியடைந்தால் 4புள்ளிகளுடன் சிஎஸ்கே அணி புள்ளிப்பட்டியலில் தற்போது கடைசி இடத்தில் இருக்கிறது.

18 வது ஐபிஎல் சீசன் தொடங்கி ஏறக்குறைய பாதிக்கும் மேற்பட்ட போட்டிகள் நிறைவடைந்த நிலையில், எந்த அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் செல்லும் என்பதை ஊகிக்க முடியாதா சூழல் தான் இருக்கிறது.

நடப்பு சாம்பியன், முன்னாள் சாம்பியன், முதல்முறையாக கோப்பைக்கு போராடும் அணி, 18 வருடம் கோப்பைக்காக காத்திருக்கும் அணி என ஒவ்வொரு அணியும் பிளே ஆஃப் சுற்றுக்குள் செல்ல முழுத்திறமையும் வெளிப்படுத்து விளையாடி வருகிறது.

ஐபிஎல் தொடரில் ஒவ்வொரு அணியும் தலா 14 லீக் போட்டிகளில் விளையாடும். இதன் முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணி மட்டுமே அடுத்த சுற்றான பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறும். தற்போதைய நிலவரப்படி சிஎஸ்கே அணி இதுவரை 8 போடிகளில் விளையாடி 2 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்று 4 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் இருக்கிறது.

நடப்பு சீசனில் ஒவ்வொரு அணியும் சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்தி வருகிறது. சென்னை அணி போலவே ராஜஸ்தான் மற்றும் ஐதராபாத் அணிகள் தலா 2 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. இந்த நிலையில் சிஎஸ்ஜே அணி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது.

சிஎஸ்கே அணி விளையாடும் மீதமுள்ள 6 போட்டிகளிலும் வெற்றி பெற்றால் மட்டுமே பிளே ஆஃப் கனவை பற்றி யோசிக்க முடியும். சிஎஸ்கே அணியின் ரன்ரேட் தற்போது மிகவும் குறைவாக உள்ளதால், 6 போட்டிகளையும் பெரிதாக வெல்ல வேண்டும்.

இதற்கு மாறக சிஎஸ்கே அணி ஒரு போட்டியில் தோற்றால் கூட பிளே ஆஃப் கனவு மிகவும் நெருக்கடியான சூழலில் அமைந்துவிடும். பிறகு  லீக் சுற்றில் மற்ற அணிகளின் வெற்றி தோல்விகளின் அடிப்படையில் சிஎஸ்கே பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறும் வாய்ப்பை பெறலாம். ஆனால் இதில் தொடரை விட்டு வெளியேறுவதற்கும் வாய்ப்பு சமமாகவே உள்ளது.

சிஎஸ்கே அணி அடுத்த போட்டியில் ஐதராபாத் அணியை எதிர்க்கொள்கிறது.