பெண்களை அவமதித்ததாக சாட்டை துரைமுருகன் மீது தவெக புகார்

A news update about Tavek filing a complaint against Durai Murugan for allegedly insulting women.


தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய், தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து மக்களை சந்திக்கவுள்ளதாகவும், ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமைகளில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெறும் என்றும் அறிவித்திருந்தார். அதன்படி, கடந்த சனிக்கிழமை திருச்சி மற்றும் அரியலூர் பகுதிகளில் விஜய் மக்களை சந்தித்து உரையாற்றினார்.

இந்நிலையில், விஜயின் பரப்புரையில் பங்கேற்ற பெண்களை அவமதிக்கும் வகையில் பேசியதாக யூடியூபர் சாட்டை துரைமுருகன் மீது தவெக நிர்வாகி இமயதமிழன், தேசிய மகளிர் ஆணையத்தில் ஆன்லைன் புகார் அளித்துள்ளார்.

அந்த புகார் மனுவில், சாட்டை துரைமுருகன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், சம்பந்தப்பட்ட காணொளியை இணையத்தில் இருந்து நீக்க வேண்டும் என்றும் கோரப்பட்டுள்ளது