
துணைவேந்தர்கள் நியமணத்தில் தமிழ்நாடு அரசின் அதிகாரத்தை உச்சநீதிமன்றம் உறுதி செய்த நிலையில், ஆளுநர் ரவி துணைவேந்தர்கள் மாநாட்டிற்கு அழைப்பு விடுத்தது சர்ச்சை ஏற்படுத்தி உள்ளது.
சட்டப்பேரவையில் நிறைவேற்றப்படும் மசோதாகளுக்கு ஒப்புதல் வழங்காமல் காலம் தாழ்த்துவதாக, உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு வழக்கு தொடுத்தது. இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் ஆளுநரின் நடவடிக்கையை கடுமையாக சாடியது.
இதனை தொடர்ந்து துணைவேந்தர்கள் நியமணத்தில் அரசின் அதிகாரத்தை உறுதி செய்வது உள்ளிட்ட தமிழ்நாடு அரசு நிறைவேற்றிய 10 மசோதாகளுக்கும் ஒப்புதல் வழங்கியது. மேலும் குடியரசு தலைவர், ஆளுநர் மசோதாவின் மீது முடிவெடுக்க காலக்கெடுவையும் உச்சநீதிமன்றம் நிர்ணயித்தது.
இந்த தீர்ப்பை குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் கடுமையாக விமர்சித்திருந்தார்.
இந்நிலையில் வருகின்ற 24 ஆம் தேதி நீலகிரியில் உள்ள ராஜ் பவனில் துணை வேந்தர்கள் மாநாடு நடத்துவதாக ஆளுநர் மாளிகை அறிக்கை வெளியிட்டது. மேலும் இந்த விழாவில் குடியரசு துணைத் தலைவரும் பங்கேற்க்க இருப்பதாகவும் அறிவித்துள்ளது.
உச்சநீதிமன்ற தீர்ப்பின் படி வேந்தர் பதவியிலிருந்து ஆளுநர் நீக்கப்பட்டுள்ளார் .இதன் பிறகும் ஆளுநர் இப்படி செயல்படுவது நீதிமன்றத்தை அவமதிக்கும் செயல் என தமிழ்நாடு அரசு மற்றும் இடதுசாரிகள் அமைப்புகள் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சியின் அமைப்பினர் ஆளுநருக்கு எதிராக கண்டங்களை தெரிவித்து வருகின்றனர். ஆளுநர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர வேண்டும் எனவும் வலியுறுத்தி வருகின்றனர்.
மேலும் பல்கலைக்கழக துணை வேந்தர்கள் இந்த மாநாட்டை புறக்கணிக்க வேண்டும் என இடது சாரி அமைப்புகள் கூறுகின்றனர்.
இதற்கிடையே இதுகுறித்து ஆளுநர் மாளிகை விளக்கமளித்துள்ளது, அதில் கடந்த 3 வருடங்களாக உதகையில் துணை வேந்தர்கள் மாநாட்டை ஆளுநர் நடத்தி வருகிறார். பல்கலைக்கழகளில் பட்டமளிப்பு விழா, துணை வேந்தர்கள் மாநாடு நடத்த ஆளுநருக்கு அதிகாரம் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் துணை வேந்தர்களை நியமிக்கும் அதிகாரம் மட்டுமே தமிழக அரசுக்கு வழக்கப்பட்டுள்ளது. அதனால் பல்கலைக்கழகத்தின் வேந்தராக ஆளுநரே தொடர்கிறார் என்றும் ஆளுநர் மாளிகை தெரிவித்துள்ளது.