சீமான் மீது நடிகை விஜயலட்சுமி புதிய குற்றச்சாட்டு

Actress Vijayalakshmi levels new serious allegations against political leader Seeman.

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் 2023ல் தி.மு.க. வந்துருச்சி… நீ எதுவும் பேசாதே, சென்னை பக்கம் வந்துடாதே, நான் மாதம் ரூ.50,000 தந்துவிடுகிறேன் என்று டீல் பேசியதாக விஜயலட்சுமி புதிதாக குற்றச்சாட்டி விடியோவொண்றை வெளியிட்டுள்ளார்

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் குறித்து நடிகை விஜயலட்சுமி கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த வீடியோவில் அவர் கூறியிருப்பதாவது:
“நல்லா குடும்பம் நடத்தி விட்டு, என் காலைவாரி விட்டுவிட்டு, கேட்டால் அவங்க யாருன்னே தெரியாது. அவங்களை காங்கிரஸ் அழைத்து வந்தது, எனக்கு எதிராக அரசியல் செய்ய என்று 14 வருஷமாக பச்சைப்பொய் சொல்லி தமிழ்நாட்டு மக்களை ஏமாத்தினீர்கள். அது யாரு ஏமாத்தினது?

2023-ம் ஆண்டு என்னிடம் நீங்களே டீல் பேசினீர்கள். தி.மு.க. வந்துருச்சி… நீ எதுவும் பேசாதே, சென்னை பக்கம் வந்துடாதே, நான் மாதம் ரூ.50,000 தந்து விடுகிறேன் என்று சொல்லியது நீங்கள்தானே என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்த வீடியோ வெளியீடு சீமான் – விஜயலட்சுமி இடையேயான சர்ச்சைக்கு புதிய திருப்பமாக அமைந்துள்ளது.