
நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான், “விஜய் எனக்கு எப்போதுமே தம்பிதான். அவரை அரசியலில் சீர்படுத்தும் பொறுப்பு எனக்கு உள்ளது. தி.மு.க., அ.தி.மு.க.வை எதிர்த்து போராடிக் கொண்டிருக்கும் நிலையில் அண்ணா, எம்.ஜி.ஆரை மீண்டும் கொண்டு வருவது தேவையில்லை” என்றார்.
சென்னை நகரில் இன்று நிருபர்களை சந்தித்த நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் கூறியதாவது:
“தமிழக வெற்றிக் கழக இளைஞர்கள் இன்னும் நிறைய கற்றுக்கொள்ள வேண்டும். பக்குவம் அடைய நேரம் எடுக்கும். ‘உச்சத்தை விட்டுவிட்டு வருவேன்’ என்று சொன்னால், உங்களை யார் வரச் சொன்னது என்ற கேள்வி எழும். அரசியலுக்கு வந்த பின் சேவை செய்ய வேண்டும்; பெருமை பேசக்கூடாது.
தி.மு.க., அ.தி.மு.க.வை அழிக்க போராடிக் கொண்டிருக்கும்போது, மீண்டும் அண்ணா, எம்.ஜி.ஆரை கொண்டு வருவதால் என்ன பயன்? விஜய் மற்றவர்களுக்கு தலைவர்; எனக்கு எப்போதுமே தம்பிதான். விஜயை அரசியலில் சீர்படுத்தும் பொறுப்பு எனக்கு இருக்கிறது” என்றார்.