
பா.ஜ.க. தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை, “ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அ.தி.மு.க.வை காப்பாற்றியது பா.ஜ.க.தான் என்பதைக் கூறியது எடப்பாடி பழனிசாமி சரித்திர உண்மையையே தெரிவித்தார். டி.டி.வி. தினகரனை ஓரிரு நாட்களில் நண்பராகச் சந்திக்கிறேன்” என்றார்.
பா.ஜ.க. தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
“அமித் ஷா கூறியபடி எடப்பாடி பழனிசாமி தான் கூட்டணி தலைவர். அவரை முதலமைச்சராக ஆக்க பா.ஜ.க. செயல்பட்டு வருகிறது. அமித் ஷாவை சந்தித்துவிட்டு வந்த எடப்பாடி பழனிசாமி முகத்தை மறைத்ததாக நான் நினைக்கவில்லை.
ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அ.தி.மு.க.வை காப்பாற்றியது பா.ஜ.க.தான் என எடப்பாடி பழனிசாமி கூறியது சரித்திர உண்மை. விஜய் சுற்றுப்பயணத்தில் கூட்டம் கூடுவது மகிழ்ச்சி தான். ஆனால் தொண்டர்கள் பொதுச்சொத்தை சேதப்படுத்தக் கூடாது.
டி.டி.வி. தினகரனை ஓரிரு நாட்களில் நண்பராகச் சந்திக்கிறேன். பா.ஜ.க. கஷ்டத்தில் இருந்தபோது டி.டி.வி. தினகரனும், ஓ.பன்னீர்செல்வமும் ஆதரவாக இருந்தார்கள். அரசியலைத் தாண்டி அவர்களோடு என் நட்பு தொடரும்” என்றார்.