
வேலூரில் நடைபெற்ற “உங்களுடன் ஸ்டாலின்” முகாமை பார்வையிடச் சென்ற அமைச்சர் துரைமுருகனை, அப்பகுதி மக்கள் திடீரென முற்றுகையிட்டனர். பாறைமேடு பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள், “எங்கள் பகுதியில் சாலை, கழிவுநீர் கால்வாய் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் எதுவும் இல்லை. பல முறை தெரிவித்தும் அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை” என குற்றம்சாட்டினர்.
இதனைத் தொடர்ந்து, அமைச்சர் துரைமுருகன் பொதுமக்களிடம் உரையாற்றி, அவர்களின் பிரச்சனைகள் தீர்க்கப்படும் என்றும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதியளித்தார்.
மேலும், வேலூர் மாவட்ட ஆட்சியர் சுப்புலெட்சுமி, “நாளை காலை 9 மணிக்கு நேரடியாக அந்தப்பகுதியில் ஆய்வு நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும்” என பொதுமக்களிடம் உறுதி அளித்தார். இதனால், அந்த பகுதியில் மக்கள் முன்வைத்த பிரச்சனைக்கு உடனடி தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் சூழ்நிலை சமனடைந்தது.