விஜய் வேட்டையாட வரும் சிங்கம் அல்ல, வேடிக்கை காட்ட வரும் சிங்கம் – சீமான் விமர்சனம்

Seeman criticizes actor Vijay, saying he is not a hunting lion but merely one that comes to perform for entertainment.


ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் நா.த.க. ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவரிடம், நடிகர் விஜயின் பரப்புரை குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு அவர், “நான் மக்களை சந்தித்து வருகிறேன். எந்த போராட்டத்திலும் நான் பங்கேற்காமல் இருந்ததில்லை. மக்களோடு மக்களாக நிற்பவன்தான் மக்களுக்காக போராடும் உண்மையான தலைவன்.

மக்களை சந்திப்பது என்பது ரோடு ஷோ நடத்துவது அல்ல. கூட்டம் கூட்டி வந்து பேசிப்போவது அல்ல. மக்களின் பிரச்சனைகளை கேட்டு, அவர்களுக்காக அவர்களோடு நின்றால்தான் அது உண்மையான மக்கள் சந்திப்பு.

அப்படி மக்களை சந்திக்கிறீர்களா? மக்கள் என்னை பார்க்கவே நான் வரேன் என்று சொல்லிவிட வேண்டும்.

இது வேட்டையாட வரும் சிங்கம் அல்ல, வெறும் வேடிக்கை காட்ட வரும் சிங்கம்” எனக் கடுமையாக விமர்சித்தார்.