கோவை அரசு மருத்துவமனையில் சக்கர நாற்காலி சர்ச்சை – கடுமையாக விர்சித்த நயினார் நாகேந்திரன்

Nainar Nagendran slams the Coimbatore Government Hospital over the wheelchair controversy.


கோவை அரசு பொது மருத்துவமனையில் நோயாளிக்கு சக்கர நாற்காலி வழங்காத சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வெகுநேரமாகியும் சக்கர நாற்காலி கிடைக்காததால், நோயுற்ற தந்தையை அவரது மகன் தரையில் இழுத்துச் செல்லும் காட்சி சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வைரலானது.

இந்நிலையில், இந்தச் சம்பவத்துக்கு எதிராக தமிழக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், “2 மணி நேரம் காத்திருந்தும் சக்கர நாற்காலி தரப்படாததால், மகன் தந்தையை இழுத்துச் சென்ற காணொளி மனதை பதைபதைக்க வைக்கிறது. மலைப்பகுதிகளில் சாலை வசதி இன்றி நோயாளிகளைத் தூளியில் கட்டிச் செல்வதிலிருந்து, பல்நோக்கு மருத்துவமனையில் நோயாளிகளை இழுத்துச் செல்லும் நிலை வரையிலும் மக்கள் அலைக்கழிக்கப்படுகிறார்கள். இதுவே உலகம் போற்றும் மருத்துவக் கட்டமைப்பா, முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களே? ஆட்சி முடியும் தருவாயிலாவது வெற்று விளம்பரத்தை விடுத்து, அடிப்படை மருத்துவ வசதிகளை மேம்படுத்துங்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதனால், கோவை அரசு மருத்துவமனையின் செயல்பாடு மற்றும் மாநில அரசின் மருத்துவக் கொள்கைகள் குறித்து புதிய சர்ச்சை கிளம்பியுள்ளது.