நடிகர் மகேஷ் பாபுவுக்கு அமலாக்கத்துறை சம்மன்! பின்னணி என்ன?

நடிகர் மகேஷ் பாபுவுக்கு அமலாக்கத்துறை சம்மன்! பின்னணி என்ன

ரியல் எஸ்டேட் நிறுவனங்களின் விளம்பரங்களில் நடித்த நடிகர் மகேஷ் பாபு மீது சட்டவிரோத பணப்பரிமாற்ற குற்றச்சாட்டு, இம்மாதம் இறுதியில் நேரில் ஆஜராக அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி உள்ளது.

அன்மையில், ஹைதராபாத்தில் உள்ள சொர்ணா குரூப்ஸ் மற்றும் சாய் சூர்யா கட்டுமான நிறுவனக்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது.சோதனை முடிவில் இந்த இரண்டு ரியல் எஸ்டேட் நிறுவனங்களும் ஒரே இடத்தை பல பேருக்கு விற்றுள்ளது . மேலும் தகுதி மற்றும் ஒப்புதல் அளிக்காத வீடுகளை விற்று 100 கோடிக்கு மேல் பண மோசடியில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.

மோசடி செய்த பணம் விளம்பர பிரபலங்கள், அரசியல் கட்சிகளுக்கு கொடுத்துள்ளதாக அமலாக்கத்துறை தெரிவிக்கிறது.

இது தொடர்பாக இந்த இரண்டு நிறுவனங்களும் மீது தெலுங்கான காவல் துறை வழக்குபதிவு செய்துள்ளது. இதையடுத்து இந்த வழக்கில் அமலாக்கத்துறை தனது பனமோசடி விசாராணையத் தொடங்கி உள்ளது.

சாய் சூர்யா நிறுவனத்தின் திட்டங்களை விளம்பரப்படுத்தியதற்காக மகேஷ் பாபு, ரூ 5.9 கோடி பெற்றதாக அமலாக்கத்துறை துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதில் ரூ 3.4 கோடி காசோலையாகவும்  ரூ 2.5 கோடி ரொக்கமாகவும் பெறப்பட்டதாக கூறப்படுகிறது.

சாய் சூர்யா நிறுவனத்தின் திட்டங்களுக்கு மகேஷ் பாபு ஆதரவளிக்கும் வகையில் இருக்கும் விளம்பரங்களில் நடித்தலால், பலதரப்பு மக்களை இதில் முதலீடு செய்யத் தூண்டியதாகக் கூறப்படுகிறது. இந்த மோசடியில் நடிகர் மகேஷ் பாபு நேரடியாக இந்த மோசடியில் ஈடுபட்டிருக்க வாய்ப்பில்லை என்றாலும், அந்த நிறுவனங்களிடம் இருந்து அவர் பெற்ற பணத்தை அமலாகத்துறை விசாரித்து வருகிறது. இதன் அடிப்படையில் வருகின்ற 28 ஆம் தேதி மகேஷ் பாபு விசாரணைக்கு நேரில் ஆஜராகும் படி அமலாக்கத்துறை சம்மன அனுப்பி உள்ளது.