
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் பூலித்தேவரின் சிலைக்கு மலரஞ்சலி செலுத்திய பின் செய்தியாளர்களை சந்தித்த டிடிவி தினகரன், 2024-ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில், நரேந்திர மோடி பிரதமராக வேண்டும் என்ற எண்ணத்தால் பாஜகவுக்கு நிபந்தனையற்ற ஆதரவு அளித்ததாகக் குறிப்பிட்டார்.
அதே நேரத்தில், 2026-ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் அமமுக யாருடன் கூட்டணி அமைக்க உள்ளது என்பது தொண்டர்களும் நிர்வாகிகளும் விரும்பும் வகையில் தீர்மானிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
இந்திய அரசியலில் முக்கிய பங்கு வகிக்கும் அமமுக கூட்டணி தொடர்பான அறிவிப்பு டிசம்பரில் வெளியாகும் என அவர் வலியுறுத்தினார்.