
மின்சாரம் தாக்கி துடித்து கொண்டிருந்த பள்ளி மாணவனை தைரியமாக காப்பாற்றிய இளைஞனின் செயலுக்கு பாராட்டுகள் குவிந்த வருகின்றன
இந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பேசு பொருளாக மாறியுள்ளது
கடந்த 16 ஆம் தேதி சென்னையில் பெய்த கனமழையால் அரும்பாக்கம் மாங்காளி நகரில் உள்ள சாலையில் தண்ணீர் தேங்கி நின்றுள்ளது
அந்த சமயத்தில் 3 ஆம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவனொருவன் அந்த சாலையில் நடந்து சென்ற போது மின்சாரம் தாக்கியுள்ளது
அதாவது சாலையோரம் பொருத்தப்பட்டிருந்த மின் மீட்டர் பெட்டியில் இருந்த வயர்கள் தேங்கியிருந்த நீருக்குள் சிதறி கிடந்ததால் மின் கசிவு ஏற்பட்டுள்ளது
இதை அறியாமல் தேங்கியிருந்த நீரில் மாணவன் நடந்து சென்றபோது மின்சாரம் தாக்கி துடிதுடிக்க மயங்கி விழுந்துள்ளார்
இதன் போது அந்த வழியாக வந்த கண்ணன் என்ற இளைஞர், மயங்கி கி்டந்த மாணவனை தூக்க அருகில் சென்று பார்த்தபோது மாணவனுக்கு மின்சாரம் தாக்கியிருப்பதை உணர்ந்துள்ளார்
பின்னர், தன் உயிரையும் பொருட்படுத்தாமல் தனக்கு மின்சாரம் தாக்கிய சந்தர்பத்திலும் துனிச்சலுடன் அந்த மாணவனை காப்பாற்றியுள்ளார்
இந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சிகளும் சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது . அதில், மாணவன் மின்சாரம் தாக்கி உயிருக்காக துடிக்கும் காட்சியும், கண்ணன் தைரியமாக நடந்து சென்று அவரை காப்பாற்றுவதையும் காணமுடிகிறது
சமூக வலைதளங்களில் இந்த வீடியோ வேகமாக பரவியதையடுத்து அந்த இளைஞரின் செயலுக்கு பலரும் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர். மருத்துவமனைக்கு அனுமதிக்கபட்டுள்ள அந்த சிறுவனின் தற்போது நலமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.