
திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் நடைபெற்ற கிட்னி மாற்று அறுவை சிகிச்சை சர்ச்சையை உருவாக்கியுள்ளது.
சரவணகுமார் என்ற இளைஞர், கடந்த 2 ஆண்டுகளாக இரு கிட்னியும் செயலிழந்த நிலையில் டயாலிசிஸ் சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு கடந்த 21ஆம் தேதி அவரது தந்தையின் கிட்னி மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
ஆனால், அறுவை சிகிச்சைக்கு பிறகு 2 நாட்களில் பொருத்தப்பட்ட கிட்னி செயலிழந்ததாகக் கூறி, மருத்துவர்கள் அதை அகற்றியுள்ளனர். இதனைத் தொடர்ந்து, “மருத்துவர்கள் முறையாக சிகிச்சை செய்யவில்லை” என்று கூறி, நோயாளியின் உறவினர்கள் மருத்துவமனை வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில், அரசு மருத்துவமனை டீன் ரேவதியிடம் கேட்ட போது அவர் கூறியதாவது:
“சரவணகுமாரின் உடல் ஒவ்வாமை காரணமாக தான் கிட்னி செயலிழந்தது . உயிருடன் இருக்கும் உறவினர்களிடமிருந்து தானமாக பெறப்படும் கிட்னியை பொருத்தும் அறுவை சிகிச்சைகளில் 88 சதவீதம் மட்டுமே வெற்றியளிக்கும் சாத்தியம் காணப்படுகின்றுது” என்று தெரிவித்தார்.
டீனின் விளக்கத்தையடுத்து, உறவினர்கள் போராட்டத்தை கைவிட்டு அமைதியாக கலைந்தனர்.