புதுச்சேரியில் லஞ்சம் வாங்கிய உதவி தொழிலாளர் ஆணையர், கட்டுமான நிறுவனர் கைது

"Officials caught and arrested in Puducherry for accepting bribes."


புதுச்சேரியில் தனியார் கட்டுமான நிறுவனத்திற்கு ஆட்சேர்ப்பு உரிமம் வழங்கும் பெயரில் லஞ்சம் வாங்கிய மத்திய அரசின் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் உதவி தொழிலாளர் ஆணையர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தேனியைச் சேர்ந்த ஒரு கட்டுமான நிறுவனம் சார்பில் உரிமம் பெற விண்ணப்பித்திருந்தது. இதற்காக அந்த நிறுவனத்திடம் உதவி தொழிலாளர் ஆணையர் ரமேஷ்குமார், ஒன்றரை லட்சம் ரூபாய் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது.

அதன்படி, ஒரு லட்சம் ரூபாயை ரமேஷ்குமாருக்கு நேரடியாக வழங்குவதற்காக, நிறுவனத்தைச் சேர்ந்த இளங்கோ என்ற நபர் வந்துள்ளார். அப்போது அங்கு கண்காணிப்பு பணியில் இருந்த சிபிஐ அதிகாரிகள் இருவரையும் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.

இருவரும் தற்போது சிபிஐ விசாரணையில் உள்ளனர். இந்த சம்பவம் புதுச்சேரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.