
மதுரை மாவட்டம் பாரபத்தி கிராமத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் 2வது மாநில மாநாடு இன்று (ஆகஸ்ட் 21) சிறப்பாக தொடங்கி நடைபெற்றது. 216 மீட்டர் நீளம், 60 அடி அகலத்தில் பிரம்மாண்டமாக மேடை அமைக்கப்பட்டு, அக்கட்சியின் முன்னணி தலைவர்கள், நிர்வாகிகள் அமர்வதற்காக 200 இருக்கைகள் வைக்கப்பட்டிருந்தன. மாநாட்டிற்கு சுமார் 2.5 லட்சத்திற்கும் மேற்பட்ட தொண்டர்கள் திரண்டனர்.
இந்நிலையில், நீலகிரியைச் சேர்ந்த ரோஷன் (18) என்ற இளைஞர் மாநாட்டுத் திடலில் திடீரென மயங்கி விழுந்தார். உடனடியாக அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, பிறகு சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டார். ஆனால் அங்கு சென்றவுடன் அவர் மூச்சுத்திணறி உயிரிழந்ததாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
மாநாட்டை ஒட்டி விருதுநகரில் பேனர் வைக்க முயன்ற இளைஞர் ஒருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் முன்பு நடந்தது குறிப்பிடத்தக்கது