
ரயிலில் டிக்கெட் எடுக்காமல் பயணித்த இளைஞரை பிடித்த RPF அதிகாரி, அபராதம் விதிக்காமல் கடுமையாக தாக்கியதோடு, ரயிலிலிருந்து வெளியே தள்ள முயன்ற சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்தக் காட்சிகள் காணொலியாக வெளியானதால் சமூக வலைத்தளங்களில் பரவலாக விமர்சனம் எழுந்தது. “அபராதம் விதிப்பதே அதிகாரியின் கடமை. ஆனால் மனிதாபிமானமின்றி இவ்வளவு ஆக்ரோஷமாக நடந்துகொண்டது முற்றிலும் தவறு” என்று நெட்டிசன்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
சம்பவத்தைப் பற்றிய புகாரைத் தொடர்ந்து, ரயில்வே துறை உடனடியாக விசாரணை நடத்தியது. அதன்பேரில், சம்பந்தப்பட்ட RPF அதிகாரி பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
ரயில்வே அதிகாரிகள், “பயணிகள் மீதான தவறான நடத்தை எவராலும் சகிக்கப்படாது. விதிமுறைகளுக்கு மீறியவர்களுக்கு கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்” என தெரிவித்துள்ளனர்.