
பா.ஜ.க. அரசு கொண்டு வந்த வக்ஃப் வாரிய சட்ட திருத்தத்திற்கு எதிராக காங்கிரஸ், திமுக, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மற்றும் தமிழக வெற்றிக் கழகம் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகள் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்திருந்தன.
இந்த வழக்குகளில் 100 க்கும் மேற்பட்ட மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்த நிலையில் கடந்த 16 ம் தேதி தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா தலைமையில் இந்த வழக்குகளின் விசாரனைகள் ஆரம்பிக்கப்பட்டது
விசாரணையின் போது இந்து அறநிலையத்துறையில் இந்துக்கள் மட்டுமே நிர்வாகிகளாக நியமிக்கப்படுவது போன்று வக்ஃப் வாரியத்தில் இஸ்லாமியர்களின் ஈடுபாடு தவிர்க்கப்படுவது ஏன்? இனி இந்து அறக்கட்டளைகளில் இஸ்லாமியர்களையும் நியமிக்கப் போகிறீர்களா? வக்ஃப் சொத்துக்கள் எவையென்பதை அரசு நிர்ணயிக்கலாம் எனும் நிலைப்பாடு சட்டத்துக்கு எதிரானது அல்லவா?” போன்ற கேள்விகள் நீதிமன்றத்தில் எழுப்பப்பட்டன.
இந்த நிலையில் இதற்கு உரிய பதில் மத்திய அரசு தரப்பில் வழங்கப்பட வேண்டுமென உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதற்கு அரச தரப்பில் இருந்து நேர அவகசாம் கோரப்பட்ட நிலையில் இந்த வழக்கு விசாரணை 17 ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது
தொடர்ந்த இந்த வழக்கின் விசாரணையில், வக்ஃப் வாரிய புதிய சட்டத்தில் அடங்கிய பல்வேறு திருத்தங்களுக்கு உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது
குறிப்பாக, தற்போது கொண்டு வரப்பட்டுள்ள புதிய சட்ட திருத்ததின் கீழ் எந்தவொரு உறுப்பினரும் நியமிக்கப்படக் கூடாது, ஏற்கெனவே வக்ஃப் சொத்து என பதிவு செய்யப்பட்ட நிலங்களில் எந்த புதிய நடவடிக்கையும் மேற்கொள்ளக்கூடாது என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்
மேலும் ஆவணங்கள் இல்லாத எந்த சொத்துகளையும் வக்ஃப் சொத்து என வகைப்படுத்தும் செயலும் தற்காலிகமாக தடை செய்யப்பட்டுள்ளது.
இஸ்லாமியர்களின் உரிமைகளை பாதுகாப்பதற்காக தொடுக்கப்பட்ட வழக்குகளுக்காக உச்ச நிதிமன்றம் வழங்கியுள்ள இந்த இடைகால உத்தரவிற்கு பல அரசியல் கட்சி தலைவர்கள் பாராட்டுக்களையும் நன்றியையும் தெரித்து வருகின்றனர்.