
அமைந்தக்கரை அய்யாவு நாயுடு காலனியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் அடிக்கடி சந்தேகத்துக்கிடமாக வாலிபர்கள் வருகை தந்ததாக விபசார தடுப்பு பிரிவுக்கு புகார் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து உதவி கமிஷனர் யாஸ்மினி உத்தரவின்படி, விபசார தடுப்பு பிரிவு-1 இன்ஸ்பெக்டர் ராஜலட்சுமி தலைமையில் போலீசார் நேற்று முன்தினம் அந்த வீட்டில் திடீர் சோதனை நடத்தினர்.
அப்போது, மாமல்லபுரத்தைச் சேர்ந்த ஜான் கிறிஸ்டியன் (33) என்பவர், தனது தோழிகளை வைத்து பாலியல் தொழில் நடத்தி வந்தது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. போலீசார் அவரை கைது செய்ததுடன், பாலியல் தொழிலுக்காக பயன்படுத்திய ஒரு இளம்பெண்ணையும், செல்போனையும் பறிமுதல் செய்தனர்.
விசாரணையில், மாமல்லபுரம் பகுதியில் பணியாற்றும் இளம்பெண்களை தனது தோழிகள் மூலம் நாள் ஒன்றுக்கு ரூ.3 ஆயிரம் வசூலித்து அழைத்து வந்து, பாலியல் தொழிலுக்கு பயன்படுத்தி வந்தது தெரியவந்தது. இதற்கு உதவிய புரோக்கரை போலீசார் தேடிவருகின்றனர்.