சுதந்திர தினத்தன்று கள்ளத்தனமாக மது விற்பனை – 2 பேர் கைது

Two arrested for selling liquor illegally on Independence Day.

நாடு முழுவதும் 79வது சுதந்திர தினக் கொண்டாட்டம் இன்று (ஆகஸ்ட் 15) உற்சாகமாக நடைபெற்றது. இதனை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள அனைத்து மதுக்கடைகளுக்கும் அரசு சார்பில் விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், கடலூர் மாவட்டம் பெண்ணாடம் பேரூராட்சிக்குட்பட்ட வெள்ளாற்று கரையில் கள்ளத்தனமாக மது பாட்டில்களை பதுக்கி விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின்பேரில் பெண்ணாடம் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, 68 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

இதுகுறித்து விசாரணை நடத்திய போலீசார், பெண்ணாடம் சோழ நகரைச் சேர்ந்த கதிர்காமன் மகன் சேட்டு (45), அதே பகுதியைச் சேர்ந்த சக்தி (27) ஆகிய இருவரையும் கைது செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட மது பாட்டில்களுடன் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

சேட்டு என்பவர் மீது ஏற்கனவே மது பாட்டில் தொடர்பான வழக்கு உள்ளதாகவும், அவர் பாஜக கடலூர் மேற்கு மாவட்டத் தலைவர் மற்றும் திட்டக்குடி தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தமிழகனின் தம்பி என்பது குறிப்பிடத்தக்கது.