
சென்னை, மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தமிழக அமைச்சர் ஐ. பெரியசாமி தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று அதிகாலை சோதனை நடத்தி வருகின்றனர்.
சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பான வழக்கில் நடைபெற்று வரும் இந்த சோதனைகள், சென்னை பசுமைவழி சாலையில் உள்ள அமைச்சர் பெரியசாமியின் இல்லம், எம்.எல்.ஏ. விடுதி அறை உள்ளிட்ட இடங்களில் ஒரே நேரத்தில் ஆரம்பிக்கப்பட்டது.
சென்னையில் அமைச்சர் தங்கியிருக்கும் எம்.எல்.ஏ. விடுதி அறையில் நான்கு அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். அதேபோல், மதுரை மற்றும் திண்டுக்கல் பகுதிகளில் உள்ள அவரது சொந்த இடங்களிலும் அதிகாரிகள் ரெய்டு நடத்தி வருகின்றனர்.
தொடர்ச்சியாக நடைபெற்று வரும் இச்சோதனைகள் காரணமாக அந்தந்த பகுதிகளில் பெரும் பரபரப்பு நிலவுகிறது.