லாரியின் பின்சக்கரங்கள் திருட்டு : போலீசாரைக் கண்டு தப்பிய 2 பேர்

Two suspects flee after stealing lorry’s rear wheels when spotted by police


விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் வெளிமாநிலப் பதிவெண் கொண்ட ஒரு லாரி நிறுத்தப்பட்டிருந்தது. லாரி ஓட்டுநர் சாலையோரத்தில் வாகனத்தை நிறுத்தி தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது, வெளிமாநிலத்தைச் சேர்ந்ததாகக் கூறப்படும் இருவர், லாரியின் பின்பக்க சக்கரங்களை லாவகமாகக் கழற்றி தங்களது லாரியில் ஏற்றிக் கொண்டிருந்தனர்.

இந்நிலையில், அங்கு ரோந்து சென்ற போலீசார் சந்தேகத்துக்கிடமாக நின்றிருந்த லாரியைப் பார்த்தனர். போலீசாரைக் கண்டதும், சக்கரங்களை திருடிய இருவரும் தங்களது லாரியை விட்டுவிட்டு தப்பியோடினர். சம்பவம் குறித்து போலீசார் ஓட்டுநரை எழுப்பி விசாரித்தபோது, சக்கரங்கள் திருடப்பட்டதை அவர் அப்போது தான் அறிந்தார்.

போலீசார், திருடர்கள் விட்டுச் சென்ற லாரியை பறிமுதல் செய்து, சம்பந்தப்பட்ட வழக்கில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.