
மதுரை மாநகராட்சியில் சொத்துவரி வசூலில் பெருமளவு முறைகேடு நடந்ததாக புகார் எழுந்தது. இதையடுத்து நடந்த விசாரணையில், 150 கோடி ரூபாய் அளவுக்கு மோசடி நடந்தது கண்டறியப்பட்டது.
இந்த வழக்கில் முன்னாள் உதவி ஆணையர் ரெங்கராஜன், சொத்துவரி விதிப்பு குழுத் தலைவர் விஜயலட்சுமியின் கணவர் கண்ணன் உள்ளிட்ட 12 பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும், 19 ஊழியர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டதோடு, 5 மண்டலத் தலைவர்கள், 2 நிலைக்குழுத் தலைவர்கள் ராஜினாமா செய்துள்ளனர். இதன் தொடர்ச்சியாக, தற்போது தூத்துக்குடி மாநகராட்சி உதவி ஆணையராகப் பணியாற்றி வரும் சுரேஷ்குமாரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.