
மன்னார்குடி பெரிய கடைத் தெருவைச் சேர்ந்த அறிவழகன், நேற்று சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது மர்ம நபர் ஒருவர் அவரது செல்போனை பறிக்க முயன்றார். அதை தடுக்க அறிவழகன் முயன்றபோது, அந்த நபர் வயிற்றில் கத்தியால் குத்தி தப்பிச் சென்றார்.
இச்சம்பவத்தில் பலத்த காயமடைந்த அறிவழகன், உடனடியாக திருவாரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த தாக்குதல், செல்போன் பறிப்பு முயற்சியிலானதா அல்லது முன்விரோதம் காரணமா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகளை பெற்ற போலீசார் குற்றவாளியை தீவிரமாக தேடி வருகின்றனர்.