
விழுப்புரம் மேலத்தெருவைச் சேர்ந்த மகேஸ்வரியின் மகன் மோகன்ராஜ் (17), திருவி.க.நகர் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வந்தார். இன்று காலை வழக்கம்போல பள்ளிக்கு வந்து வகுப்பறையில் அமர்ந்த அவர், திடீரென மயக்கம் ஏற்பட்டு இருக்கையிலிருந்து கீழே விழுந்தார். இதனால் அருகிலிருந்த மாணவர்கள் அவரை உடனடியாக மீட்டு, வகுப்பு ஆசிரியருக்கு தகவல் தெரிவித்தனர்.
பின்னர் மோகன்ராஜ், விழுப்புரம் நான்கு வழிச்சந்திப்பில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள், உடலில் ஆக்சிஜன் அளவு குறைவதாக தெரிவித்து, உடனடியாக முண்டியமாக்கம் மருத்துவமனைக்கு மாற்றுமாறு கூறினர். ஆனால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்ததாக மருத்துவர்கள் அறிவித்தனர்.
இந்த சம்பவம்சக மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் பள்ளிக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டது. மாணவனின் மரணம் குறித்து விழுப்புரம் தாலுகா போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.