
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் மற்றும் சோளிங்கர் பகுதிகளில் உள்ள அரசு பள்ளிகளில், வாய் பேச முடியாதவர் எனக் கூறி உதவி கேட்க வந்த ஒருவன், நூதன முறையில் திருட்டில் ஈடுபட்டுள்ளார்.
மாற்றுத்திறனாளிக்கான ஆவணங்களை காட்டுவது போல் ஆசிரியர்களின் கவனத்தை திசை திருப்பி, தொடர்ச்சியாக 4 பள்ளிகளில் 4 ஆசிரியர்களிடம் இருந்த செல்போன்களைத் திருடியுள்ளார்.
இந்த சம்பவங்கள் தொடர்பாக பள்ளிகளில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை போலீஸார் பரிசோதித்து, குற்றவாளியை அடையாளம் கண்டுள்ளனர். தற்போது அந்த நபரை பிடிக்க வலை வீசி தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.