
நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை அருகே உள்ள வழவந்திநாடு காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக (எஸ்.ஐ.) பணியாற்றி வந்தவர் மோகன்குமார் (55). இந்நிலையில், அவர் 19 வயது கல்லூரி மாணவி ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட மாணவி தரப்பில் இருந்து புகார் அளிக்கப்பட்டது. புகாரின் பேரில், நாமக்கல் அனைத்து மகளிர் போலீசார் வழக்கு பதிவு செய்து மோகன்குமாரை கைது செய்தனர். பாலியல் வன்கொடுமை வழக்கில் காவல்துறையைச் சேர்ந்த அதிகாரி ஒருவரே கைது செய்யப்பட்டுள்ள சம்பவம், பொதுமக்கள் மற்றும் காவல்துறையினரிடையே அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.