
கர்நாடகா எல்லையான பலமனேர் பகுதியில் ரூ.50 லட்சம் மதிப்புள்ள செம்மரக்கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன. பலமனேர் பகுதியில் வசிக்கும் பாஸ்கர் ரெட்டி என்பவரது வீட்டில் செம்மரக்கட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்ததாக தகவல் கிடைத்தது. இதையடுத்து, போலீசார் அங்கு சோதனை நடத்தினர்.
அப்போது, வீட்டின் உள்ளே மிகுந்த அளவில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த செம்மரக்கட்டைகள் கண்டுபிடிக்கப்பட்டன. அவற்றின் மதிப்பு சுமார் ரூ.50 லட்சம் என மதிப்பிடப்பட்டுள்ளது. சம்பவத்துக்குப் பிறகு, வீட்டு உரிமையாளர் பாஸ்கர் ரெட்டி தப்பியோடியதால், அவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த சம்பவம் பலமனேர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.