ரூ.30 லட்சம் ஹெராயின் கடத்தல் – பெண் உட்பட 2 பேர் கைது!

"Two arrested, including a woman, for smuggling heroin worth ₹30 lakh"


அசாம் மாநிலம் நவுகாவை சேர்ந்த நூர் அமீன் (29), ஹிப்ஜூல் நஹார் (25) ஆகியோர், அசாமிலிருந்து கேரள மாநிலம் ஆலுவா ரயில் நிலையம் வந்தடைந்தனர். அங்கிருந்து ஆட்டோவில் பெரும்பாவூர் நோக்கி நேற்று முன்தினம் புறப்பட்டனர்.

அந்நேரம், பெரும்பாவூர் காவல் நிலைய எஸ்.ஐ. அஜித் தலைமையிலான போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். சோதனையின் போது, அந்த ஆட்டோவை தடுத்து, பயணித்த நூர் அமீன் மற்றும் ஹிப்ஜூல் நஹாரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். இருவரும் முன்னுக்குப் பின்னாக பதிலளித்ததால் போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.

பின்னர், அவர்களின் உடமைகள் சோதனை செய்யப்பட்டது. இதில், பெண் அணிந்திருந்த ஆடையில் ரூ.30 லட்சம் மதிப்புள்ள ஹெராயின் மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து, பெரும்பாவூர் போலீசார் ஹெராயினை பறிமுதல் செய்து, நூர் அமீன், ஹிப்ஜூல் நஹார் ஆகியோரையும் கைது செய்தனர். இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.