தீரன் சின்னமலையின் 269-வது பிறந்த நாள்: கிண்டியில் மரியாதை செலுத்திய முதல்வர் மு.க. ஸ்டாலின்

தீரன் சின்னமலையின் 269-வது பிறந்த நாள் கிண்டியில் மரியாதை செலுத்திய முதல்வர் மு.க. ஸ்டாலின்

இந்திய சுதந்திரப் போராட்டத்தில்  பங்காற்றிய மாவீரர் தீரன் சின்னமலையின் 269-வது பிறந்தநாளையொட்டி, இன்று சென்னை கிண்டியில் அமைந்துள்ள அவரது உருவச்சிலைக்கு தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

இந்த நிகழ்வில் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், மற்றும் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி தலைவர் ஈஸ்வரன் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

தீரன் சின்னமலை, 18-ம் நூற்றாண்டில் கொங்கு நாட்டில் பிறந்து, பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராக சுதந்திர போராட்டத்தில் முக்கிய பங்கு வகித்தவராவார். 

மேலும் ஆங்கிலேயருக்கு எதிராக போராடி சுதந்திரத்தை பெற்று தர அவர் ஆற்றிய பணிகள் ஏராளமானவை. 

இதனால் அவரின் வீரம், தியாகம் மற்றும் தேசிய உணர்வை நினைவுபடுத்தும் வகையில், தமிழ்நாடு அரசு ஆண்டுதோறும் அவரது பிறந்தநாளை அரசு விழாவாக கொண்டாடி வருகிறது.

இந்த நிலையில் இந்த ஆண்டும் தீரன் சின்னமலையின் பிறந்தநாளையொட்டி அவரின் முக்கியத்துவத்தை உணர்த்தும் விதமாக, அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் அவரது உருவச்சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தி வருகின்றனர்.