சாலை அமைப்பில் தகராறு: திமுக தலைவர்–துணைத்தலைவர் தரப்பினர் மோதல்

"Clash erupts between DMK leader and deputy leader groups over road construction issue"


தேனி மாவட்டம் கெங்குவார் பட்டி பகுதியில் உள்ள பட்டிமந்தை சாலையை சீரமைக்கும் பணி சமீபத்தில் தொடங்கப்பட்டது. இந்தப் பணியை பேரூராட்சி துணைத்தலைவர் ஞானமணியின் உறவினரும், மாநில அமைச்சர் பெரியசாமியின் உதவியாளருமான ஸ்டீபன் மேற்கொண்டதாக கூறப்படுகிறது.

ஆனால், இந்தச் சாலைப்பணி உரிய அனுமதி பெறாமல் நடைபெறுவதாகக் கூறி, பேரூராட்சி மன்றத் தலைவர் தமிழ்ச்செல்வி, கவுன்சிலர் ராஜவேல் ஆகியோர் பணியை தடுத்தனர். இதனால் இருதரப்பினருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டு, அது அடிதடியாக மாறியது.

பின்னர், தலைவி தமிழ்ச்செல்வி தரப்பினரும், துணைத்தலைவர் ஞானமணி தரப்பினரும் தனித்தனியாக சாலை மறியலில் ஈடுபட்டதால், அந்தப் பகுதியில் பரபரப்பு நிலவியது. போலீசார் அங்கு விரைந்து சென்று நிலைமை கட்டுக்குள் கொண்டுவந்தனர்.