
திரையரங்கில் நாம் தமிழர் கட்சி உறுப்பினர்கள் திடீர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டதால் அங்கு பதற்ற நிலை உருவாகியுள்ளது
கோவை கணபதி பகுதியில் அமைந்துள்ள ஐநாக்ஸ் திரையரங்கிலேயே , நாம் தமிழர் கட்சி உறுப்பினர்கள் இவ்வாறு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்
இந்தி திரைப்படமான ‘ஜாட்’ என்ற திரைப்படத்தில் ஈழ விடுதலைப் போராட்டத்தை தவறாகவும் ,கீழ் தனமாகவும் சித்தரித்துள்ளதாக கூறி, அவர்கள் இந்த எதிர்ப்பை முன்னெடுத்துள்ளனர்
போராட்டக்காரர்கள் திரையரங்கிற்குள் நுழைந்து, திரைப்படத்தை எதிர்த்து ஈழ தமிழர்களுக்கான கொடிகளுடன் கோஷங்கள் எழுப்பியுள்ளனர்
திரையரங்கின் பாதுகாப்பு பணியாளர்கள் போராட்டக்காரர்களை வெளியேற்ற முயன்றதால் அங்கு பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது
நாம் தமிழர் கட்சி, இதற்கு முந்தைய ‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படத்தையும் எதிர்த்து போராட்டங்களில் ஈடுபட்டுள்ளது.
அந்த திரைப்படத்தில் இஸ்லாமிய சமூகத்தை தவறாக சித்தரித்தாகக் கூறி, திரையரங்குகள் முன்பு முற்றுகை போராட்டங்களை நடத்தியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.