தேனீக்கள் கொட்டியதில் தவில் கலைஞர் பலி – 10 பேர் காயம்

"Thavil musician killed and 10 injured in sudden bee attack during event."


விழுப்புரம் மாவட்டம் வானியம்பாளையத்தில், ஆவணி அவிட்டத்தை முன்னிட்டு நேற்று பூணூல் அணியும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்காக பலரும் கூடியிருந்தனர். அப்போது, அருகிலிருந்த ஒரு மரத்தில் இருந்த தேன்கூடு கலைந்து, தேனீக்கள் கூட்டமாக பறந்து வந்து நிகழ்ச்சியில் இருந்தவர்களை தாக்கின.

இந்த தாக்குதலில், நிகழ்ச்சியில் தவில் வாசித்து கொண்டிருந்த கோபு என்பவர் உட்பட பலர் படுகாயம் அடைந்தனர். கடுமையாக காயம் அடைந்த கோபு, மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார்.

மேலும் 10-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்த நிலையில், அவர்களுக்கு அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்புத் துறையினர், மரத்தில் இருந்த தேன்கூட்டை பாதுகாப்பாக கலைத்தனர்.

இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் துயரமும் அச்சமும் ஏற்படுத்தியுள்ளது.