திருச்சி விமான நிலையம் நோக்கிச் சென்ற கார் விபத்து – 3 பேர் பலி, 5 பேர் காயம்

A tragic car accident en route to Trichy Airport left 3 dead and 5 injured. A tragic road accident occurred while heading to Trichy Airport, resulting in the death of 3 people and injuries to 5 others. Authorities are investigating the cause.


திருச்சி மாவட்டம் லால்குடி நகர் பகுதியைச் சேர்ந்த சந்தோஷ், வேலைக்காக வெளிநாடு செல்ல இருந்தார்.

அவரை வழியனுப்பி வைக்க 8 பேர் காரில் திருச்சி விமான நிலையம் நோக்கிச் சென்றபோது, எதிரே வந்த டூவீலரில் மோதிய கார், கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் தலைகுப்புற கவிழ்ந்தது.

இந்த விபத்தில், டூவீலர் ஓட்டிய விஸ்வநாதன் மற்றும் காரில் பயணித்த அரவிந்த், சாதிக்பாட்சா ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். கடுமையாக காயமடைந்த 5 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.