பா.ஜ.க பிரமுகர் ஜெகன் கொலை – 2 ரவுடிகளுக்கு ஆயுள் தண்டனை

Two rowdies sentenced to life imprisonment for the murder of BJP functionary Jagan.


புதுச்சேரி குருமாம்பேட்டைச் சேர்ந்த பா.ஜ.க பிரமுகர் ஜெகன் என்ற ஜெகதீஷ், 2017ஆம் ஆண்டு ரவுடிகளால் வெட்டிக் கொல்லப்பட்டார். இந்தக் கொலை வழக்கில் போலீசார் 8 பேரை கைது செய்தனர்.

நீண்ட நாள் விசாரணைக்குப் பிறகு, வழக்கில் தொடர்புடைய ரவுடிகள் இளவரசன் மற்றும் முத்துகுமாருக்கு, புதுச்சேரி நீதிமன்றம் ஆயுள் தண்டனையும் தலா ரூ.10,000 அபராதமும் விதித்தது.

இதே வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட கார்த்தி, 2018ஆம் ஆண்டு ஜெகன் தரப்பினரால் கொலை செய்யப்பட்டார். மீதமுள்ள 5 பேருக்கு சாட்சியங்கள் போதாமையால் விடுதலை வழங்கப்பட்டது.