சாக்கடை கழிவுகளை உடம்பில் ஊற்றிக்கொண்டு காங்கிரஸ் நிர்வாகிகள் ஆர்ப்பாட்டம்!

சாக்கடை கழிவுகளை உடம்பில் ஊற்றிக்கொண்டு காங்கிரஸ் நிர்வாகிகள் ஆர்ப்பாட்டம்!

சாக்கடை நீரை உடம்பில் ஊற்றிக்கொண்டு வினோதமான  போராட்டமொன்றை  காங்கிரஸ் நிர்வாகிகள் மேற்கொண்டுள்ளனர்

நெல்லை மாநகராட்சிக்கு உட்பட்ட பாளையங்கோட்டை 32 வது வார்டில்  ஜோதிபுரம் நேச நாயனார் தெரு மற்றும் காரிய நாயனார் தெரு சந்திப்பில் உள்ள சாக்கடையானது பல நாட்களாக சேதமடைந்த நிலையில் காணப்படுவதாக கூறப்படுகிறது

மேலும் சாக்கடையின் தடுப்புச்சுவர் உடைந்து கழிவு நீரானது வீதியின் இரு பக்கமும் ஓடுவதுடன் கோவில் முன்பாகவும் திருக்களிலும்  வடிந்து ஓடுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது

இதனை சரி செய்ய பலமுறை மனு அளித்தும் நடவடிக்கைகள் எதுவும் மேற்கொள்ளாத நிலையில் காங்கிரஸ் கட்சியினர் இந்த வினோதமான அடையாள போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்

நெல்லை மாநகர காங்கிரஸ் தலைவர் சங்கர பாண்டியன்  மற்றும் அவரது தொண்டர்களும் இணைந்து வார கால் பணிகளை உடனடியாக மேற்கொள்ளுமாறு வலியுறுத்தி   தங்களது உடலில் சாக்கடை கழிவுகளை ஊற்றிக்கொண்டு போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்

கழிவு நீரை ஊற்றி கொண்டு அதே கோலத்தில் ஜோதிபுரம் மக்களை இணைத்துக் கொண்டு மாநகராட்சி கூட்டத்திற்கு சென்ற சங்கர பாண்டியன்  மற்றும் அவரது தொண்டர்கள்  மேயரிடம் மனுவொண்றையும் கையெழுத்துள்ளனர்